×

டெல்லியில் விவசாயி சுட்டுகொலை: ஒன்றிய அரசை கண்டித்து செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் போராட்டம்

அரியலூர்: டெல்லியில் விவசாயி சுட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து திருமானூர் அடுத்த சேனாபதி கிராமத்திலுள்ள செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்றிய அரசுடன் நடத்திய நான்கு கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

விவசாயிகள் நேற்று பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி சென்ற போது, எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறைக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மீது காவல்துறை தடியடி மற்றும் கண்ணீர் புகைகுண்டு வீசினர். குறிப்பாக பஞ்சாப் ஹரியானா எல்லைப் பகுதியான கனாரியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 21வயதான விவசாயி உயிரிழந்தார்.

மேலும் இத்தகைய போராட்டத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் நேற்றைய தினம் விவசாயி ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த சேனாபதி கிராமத்தில் உள்ள செல்போன் டவரில் விவசாயிகள் சண்முக சுந்தரம் மற்றும் வேலுமணி ஆகிய இருவர் செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post டெல்லியில் விவசாயி சுட்டுகொலை: ஒன்றிய அரசை கண்டித்து செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Union government ,Ariyalur ,Senapati village ,Thirumanoor ,Delhi ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் சந்தையில் வெங்காய...